‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘புகார் பெட்டி செய்தி’ எதிரொலி:
ஒளிரும் தெருவிளக்கு
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சேசம் பாடி பகுதியில் மூப்ப கோவில் மேல தெருவில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் அந்த பகுதிகள் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக மூப்ப கோவில் மேல தெருவில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் சன்னதி பஸ்நிறுத்தம் பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலகத்தில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள், மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த பயணிகள் நிழலகம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் வெயில், மழை ஆகிய நேரங்களில் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பயணிகள் நிழலகம் அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் அந்த பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழலகத்தை சீரமைத்து, அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பட்டீஸ்வரம்.
மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
தஞ்சையில் இருந்து செட்டிசத்திரத்திற்கு செல்வதற்காக பஸ் ஒன்று இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் தினமும் ஏராளமான மக்கள் பயணித்து வந்தனர். இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுவதால் தஞ்சையில் இருந்து இயக்கப்பட்ட பஸ் தற்போது இயக்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தருவதோடு, மீண்டும் அதே வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும்.
-பொதுமக்கள், செட்டிசத்திரம், தஞ்சாவூர்.
Related Tags :
Next Story