வி.புதூர் அய்யப்பன் கோவிலில் மாலை அணிவிப்பு
விரதமிருந்த பக்தர்கள் வி.புதூர் அய்யப்பன் கோவிலில் மாலை அணிவித்தனர்.
ஆலங்குளம்,
ராஜபாளையம் - ஆலங்குளம் நெடுஞ்சாலையில் வி.புதூர் கிராமத்தில் அய்யப்பன் கோவில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 6 மாத காலமாக இந்த கோவில் நடை திறக்கவில்லை. இந்த நிலையில் 6 மாதத்திற்கான 6 நாள் பரிகார பூஜை முடித்து நடை திறக்கப்பட்டது. நேற்று கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையில் 56-ம் படி குருநாதர் சத்திரப்பட்டி சுந்தரராஜ் பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். பின்னர் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ெதாடர்ந்து மதியம் அன்னதானம் நடைபெற்றது. இந்த ேகாவில் நடை அடுத்த மாதம் 26-ந் தேதி வரை திறந்து இருக்கும். இருமுடி தாங்கி வருபவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வி.புதூர் அய்யப்பன் கோவில் அன்னதான டிரஸ்டி தலைவர் சுந்தரராஜ், கோவில் பூசாரி ராஜீமகாதேவன், தொழிலதிபர் காசிவிஸ்வநாதன், நிர்வாகி புதூர் முனியாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story