கனத்த மழையால் தரைப்பாலம் உடைந்தது


கனத்த மழையால் தரைப்பாலம் உடைந்தது
x
தினத்தந்தி 18 Nov 2021 1:18 AM IST (Updated: 18 Nov 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

கனத்த மழையால் அறந்தாங்கியில் தரைப்பாலம் உடைந்தது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையினால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. அணைக்கட்டுகள், தடுப்பணைகளில் நீர் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளாறு, அக்னியாறு, காட்டாறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. 
இந்தநிலையில் புதுக்கோட்டையில் நேற்று மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. தொடர்ந்து ஓரே சீராக பெய்தது. இந்த மழையினால் மீண்டும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குளங்களில் இருந்து உபரிநீர் மேலும் வெளியேறி கால்வாய், சாலையில் ஓடியது. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது.
23 கால்நடைகள் சாவு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் நேற்று காலை 7 மணி நேர நிலவரப்படி பெய்த மழையில் குடிசை, ஓட்டு வீடுகள் என 28 வீடுகள் சேதமடைந்தன. 13 மாடுகள், 7 ஆடுகள், 3 கன்றுக்குட்டிகள் என 23 கால்நாடைகள் இறந்தன.
தரைப்பாலம் உடைந்தது
அறந்தாங்கி அருகே அழியாநிலையில் இருந்து கோங்குடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் ஒரு பகுதி மழை வெள்ளத்தால உடைந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.  அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தற்போது மாற்று வழியாக கடயாத்துபட்டி செங்கமாரி வழியாக சென்று வருகின்றன. உடைந்த தரைப்பாலத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். 


Next Story