டிரைவர் மர்ம சாவு


டிரைவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 18 Nov 2021 1:18 AM IST (Updated: 18 Nov 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருேக டிரைவர் மர்மமான முறையில் இறந்தார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள மெட்டுகுண்டுகிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது வீட்டு மாடியில் நெல்லை டவுன் ஜவகர்லால்தெருவை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (வயது42) என்பவர் வாடகைக்கு குடியேறியுள்ளார். தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணியில் ஜே.சி.பி. டிரைவராக பணியாற்றும் முத்துகிருஷ்ணன் வீட்டு மாடியில் கதவு திறந்து கிடந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி மெட்டுக்குண்டு கிராம நிர்வாக அதிகாரி மதன் குமார் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story