ரவுடி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை


ரவுடி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Nov 2021 7:57 PM (Updated: 17 Nov 2021 7:57 PM)
t-max-icont-min-icon

ரவுடி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்த கூலு என்கிற காளிதாஸ் (வயது31). ரவுடியான இவர் பரிவீர மங்கலத்தை சேர்ந்த கிராம உதவியாளர் பெரியசாமியை, மணல் கடத்தலுக்கு தடங்கலாக இருந்து வந்ததால், அவரை உப்பின் மீது முட்டி போட வைத்து, கம்பால் பின்னந்தலையில் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காளிதாசை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அரசு ஊழியர்களை தாக்கி பணி செய்ய விடாமல் செய்யும் நபர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு காளிதாஸ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதா ராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்படி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலில் காளிமுத்துவிடம் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story