நூல் விலை உயர்வை கண்டித்து வாரம்தோறும் 3 நாட்கள் வேலைநிறுத்தம் விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
நூல் விலை உயர்வை கண்டித்து வாரம்தோறும் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சங்கரன்கோவில்:
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன் நிருபர்ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 90 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 10 மாதங்களாக நூல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது 60 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.1,450 ஆக இருந்த நூல் விலை கடந்த 10 மாதங்களில் ரூ.2,175 ஆக அதிகரித்துள்ளது. இதனால் விசைத்தறி தொழில் நசிந்து வருகிறது.
நூல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் குறிப்பாக சேலம், ஈரோடு, கோவை, சங்கரன்கோவில், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாரம் தோறும் 3 நாட்கள் அதாவது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளித்து உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அத்துடன் இதுதொடர்பாக நாளை (வெள்ளிக்கிழமை) அந்தந்த மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story