ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு


ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Nov 2021 1:42 AM IST (Updated: 18 Nov 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

பணமோசடி செய்ததாக அளிக்கப்பட்ட 2 புகார்களை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்,
பணமோசடி செய்ததாக அளிக்கப்பட்ட 2 புகார்களை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே..டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
ஆவினில் வேலை 
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை ேசர்ந்தவர் ரவீந்திரன் (வயது49). இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். தாயில்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மாரியப்பன். 
இந்தநிலையில் ரவீந்திரன் தனது சகோதரி மகன் ஆனந்த் என்பவருக்கு வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளார். இதையடுத்து வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் விஜயநல்லதம்பி மூலமாக ஆவின் கிளை மேலாளர் வேலை வாங்க வாய்ப்பு உள்ளதாக மாரியப்பன் தெரிவித்தார். 
இதனை தொடர்ந்து விஜயநல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு சென்று, ஆனந்த்திற்கு வேலை வாங்கி தரும்படி ராஜேந்திரபாலாஜியிடம் பேசி முடித்து விட்டதாக கூறி ரூ.30 லட்சத்தை பல தவணைகளாக பெற்றதாக கூறப்படுகிறது. வேலை வாங்கி தராத நிலையில் ரவீந்திரன் பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.30 லட்சத்தை ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்து விட்டதாகவும், அவர் திருப்பி தந்தால்தான் தர முடியும் என்றும் விஜயநல்லதம்பி கூறியதாக தெரிகிறது. 
இதனைத்ெதாடர்ந்து ரவீந்திரன், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றவியல் பிரிவு போலீசார் விஜயநல்லதம்பி,  கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாரியப்பன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
4 பேர் மீது வழக்கு 
இதற்கிடையே விஜயநல்லதம்பி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகாரில் சத்துணவு, ஆவின், கூட்டுறவு, பஞ்சாயத்து ஆகிய துறைகளில் பல்வேறு நபர்களுக்கு வேலை வாங்கி தர கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வக்கீல் முத்துபாண்டி ஆகியோரிடம் பல தவணைகளாக ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்ததாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர் வருைகயையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும், மேலும் பல்வேறு பணிகளை செய்யவும்  ராஜேந்திரபாலாஜி கூறியதின் பேரில் ரூ. 1½ கோடி செலவு செய்துள்ளேன். ஆனால், வேலை வாங்கி தராமலும், திருப்பி தருவதாக கூறிய பணத்தை திருப்பி தராமலும் மொத்தம் ரூ.3 கோடி வரை ஏமாற்றிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் கே.டி.ராஜேந்திரபாலாஜி, உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வக்கீல் முத்துபாண்டி ஆகிய 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story