தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை


தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
x
தினத்தந்தி 18 Nov 2021 1:55 AM IST (Updated: 18 Nov 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழை காரணமாக வரத்து குறைந்து காணப்படுவதால் நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்றது.

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஏராளமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட செடிகள் நீரில் மூழ்கி அழுகி விட்டன. இதனால் நெல்லை, தென்காசி பகுதியில் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொடர் மழை காரணமாக நெல்லை மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த வாரத்திலிருந்து அதிகரிக்க தொடங்கிய காய்கறி விலை இந்த வாரம் மேலும் உயர்ந்துள்ளது.

நெல்லையில் நேற்று ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கத்தரிக்காய் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் வெள்ளை நிற கத்தரிக்காய் ரூ.90-க்கும், மற்ற நிறத்திலான கத்தரிக்காய் ரூ.70-க்கும் விற்கப்பட்டது.

கேரட் ரூ.60 முதல் ரூ.100 வரையிலும், பீன்ஸ் ரூ.70-க்கும், உருளைக்கிழங்கு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. 



Next Story