பரளியாற்றின் கரையில் விளைநிலத்தில் விரிசல்
திருவட்டார் அருகே பரளியாற்றின் கரையில் விளை நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
திருவட்டார்,
திருவட்டார் அருகே பரளியாற்றின் கரையில் விளை நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கனமழை
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்தன. ஆற்றின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருந்ததால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தநிலையில், திருவட்டார் அருகே பாரதப்பள்ளி பகுதியில் பரளியாறு ஓடும் இடத்தின் கரையில் உள்ள விளை நிலங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் தரைப்பகுதியில் சுமார் 10 அடி ஆழம் வரை காணப்படுகிறது.
சில இடங்களில் 200 முதல் 300 மீட்டர் நீளத்துக்கு பெரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
நிலம் இரண்டாக பெயர்ந்தது
பாரதப்பள்ளியை அடுத்த பிலாங்காலவிளை பகுதியை சேர்ந்த கணேசன் (வயது52) என்பவரின் மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் விரிசல் ஏற்பட்டு அந்த நிலம் இரண்டாக பெயர்ந்துள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது தண்ணீர் தேங்கி நின்று நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அந்த பகுதி மக்கள் கூறினர்.
Related Tags :
Next Story