அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்


அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
x
தினத்தந்தி 18 Nov 2021 2:37 AM IST (Updated: 18 Nov 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

நெல்லை:
கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம்.

அதேபோன்று இந்த ஆண்டும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று ஏராளமானவர்கள் ஆற்றங்கரைகளில் புனித நீராடி விரதத்தை தொடங்கினர். நெல்லை தாமிரபரணி ஆற்றில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குளித்து விட்டு, விநாயகர் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். 

பாளையங்கோட்டை பொதிகை நகர் அய்யப்பன் கோவிலில் நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
இதேபோல் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நெல்லை சந்திப்பில் உள்ள சாலைகுமாரசாமி கோவில், டவுன் சந்திவிநாயகர் கோவில், நெல்லையப்பர் கோவிலிலும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் சென்று தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். பல்வேறு இடங்களிலும் அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கியதால், பெரும்பாலான தெருக்களிலும், வீதிகளிலும் அய்யப்ப பக்தர்களின் ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்ற பக்தி கோஷமும், பக்தி பாடல்களும் ஒலித்தன. 

Next Story