அ.தி.மு.க. பிரமுகருக்கு விதித்த தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு
அ.தி.மு.க. பிரமுகருக்கு விதித்த தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). முன்னாள் அ.தி.மு.க. ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவர். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்தார். இதையடுத்து அவர் கைதானார். இந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் தேனி மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து தனக்கு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சுரேஷ் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.
அதேநேரத்தில் அவருக்கு தேனி மாவட்ட கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உத்தரவிடுமாறு தேனி போலீசார் தரப்பில் மற்றொரு மனு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் பாரதிதாசன், ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். முடிவில், சுரேசுக்கு விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Related Tags :
Next Story