பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி


பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்-குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
x
தினத்தந்தி 18 Nov 2021 4:08 AM IST (Updated: 18 Nov 2021 4:08 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நடந்த சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.

சேலம்:
பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் நடந்த சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
குறைதீர்க்கும் முகாம்
சேலம் அன்னதானப்பட்டி மணியனூரில் உள்ள தெற்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அந்த மனுக்களை கலெக்டர் கார்மேகத்திடம் வழங்கிய அமைச்சர், மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
முகாமில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது பரிசீலனை செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உதவித்தொகை கேட்டும், வேலைவாய்ப்பு கேட்டும் ஏராளமானவர்கள் மனு கொடுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு வருகிற 26-ந் தேதி சேலத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தகவல் தெரிவிக்கப்படும்
முகாம்களில் வேலைவாய்ப்பு கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு இதுகுறித்து முறையாக தகவல் கொடுக்கப்படும். அவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு படிப்புக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்த முகாமில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன். கவுதம சிகாமணி, வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் செல்வம், மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்டத்தில் தலைவாசல், ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Next Story