ரெயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்

திருச்சி, நவ. 18-
ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு வசதியில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரெயில்வே அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் வழக்கமான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் அவை சிறப்பு ரெயில்கள் சேவையாக அறிவிக்கப்பட்டு இயங்கி வந்தன. இந்நிலையில் சிறப்பு ரெயில் சேவைகளை வழக்கமான ரெயில் சேவைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரெயில்வே முன்பதிவு திட்டத்தில் படிப்படியாக ஒவ்வொரு ரெயிலாக வண்டி எண், கட்டண விதிப்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, கடந்த 14-ந்தேதி முதல் வருகிற 21-ந்தேதி வரை அதாவது இரவு 11.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.30 மணி வரை முன்பதிவு சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சேவை நிறுத்தப்பட்ட நேரத்தில் இணையதளம் வாயிலாக பயணச்சீட்டு பதிவு செய்வது, ரத்து செய்வது உள்ளிட்ட எந்த செயல்களையும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள இயலாது.

Related Tags :
Next Story