ஓசூர் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது
ஓசூர் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே அத்திமுகம் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து, சேலம் மண்டல மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பூபதி ஆகியோர் தலைமையிலான குழுவினர், அத்திமுகம் கிராமத்தில் உள்ள மருந்தகங்களில் சோதனை நடத்தினர். அப்போது, திருப்பத்தூரை சேர்ந்த மோகன் (வயது39), சூளகிரியை சேர்ந்த சரவணன் (40) ஆகிய இருவரும் மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும், போலி டாக்டர்கள் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் பேரிகை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், 2 கிளினிக்குகளுக்கு மருத்துவக்குழுவினர் சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story