ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக குறைந்தது பரிசல் இயக்க தொடர்ந்து தடை


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக குறைந்தது பரிசல் இயக்க தொடர்ந்து தடை
x
தினத்தந்தி 18 Nov 2021 10:29 AM IST (Updated: 18 Nov 2021 10:29 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும் பரிசல் இயக்க தடை தொடர்கிறது.

பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும் பரிசல் இயக்க தடை தொடர்கிறது. 
நீர் வரத்து குறைந்தது
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
இந்த நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஆனாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
பரிசல் இயக்க தடை
நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் உள்ளதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் நீடித்தது.
மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக, கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story