பாலியல் குற்றங்கள் குறித்து மாணவிகள் புகார் அளிக்க தயங்க கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்


பாலியல் குற்றங்கள் குறித்து மாணவிகள் புகார் அளிக்க தயங்க கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்
x
தினத்தந்தி 18 Nov 2021 4:04 PM IST (Updated: 18 Nov 2021 4:04 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் குற்றங்கள் குறித்து மாணவிகள் புகார் அளிக்க தயங்க கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்

தூத்துக்குடி:
பாலியல் குற்றங்கள் குறித்து மாணவிகள் புகார் அளிக்க தயங்க கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி காவல்துறை சார்பில் புனித மரியன்னை கல்லூரியில் மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பாலியல் குற்றம் அதிகரிப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்களுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. இந்த பாலியல் குற்றங்கள் குறித்து பெண்களுக்கு கண்டிப்பான விழிப்புணர்வு தேவை. 
பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். மேலும் பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்கையில் நமக்கே தெரியாமல் கணினி வழி குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
புகார் தெரிவிக்க வேண்டும்
இதுபோன்று குற்றங்கள் நடைபெற்றால் நீங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சைபர் குற்ற பிரிவு போலீஸ் நிலையத்திலோ அல்லது மாவட்டத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்திலோ புகார் அளிக்கலாம். மேலும் இலவச தொலைபேசி எண்களான அவசர போலீஸ் எண் 100, தூத்துக்குடி மாவட்ட போலீஸ்துறை ஹலோ போலீஸ் எண் 95141 44100, மகளிர்-சிறார் உதவி எண் 1091 மற்றும் சைபர் குற்ற பிரிவு தொலைபேசி எண் 155260 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில் டவுன் போலீஸ் துணை  சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரன், வனிதா, சப்- இன்ஸ்பெக்டர் சுதாகரன், கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story