குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.1.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.1.82 கோடி வருவாய் கிடைத்துள்ளது
x
தினத்தந்தி 18 Nov 2021 6:02 PM IST (Updated: 18 Nov 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ஒரு கோடியே 82 லடசம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவில்  பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியலில் ரூ.1 கோடியே 82 லட்சத்து 41 ஆயிரத்து 210 ரூபாய் இருந்தது.
முத்தாரம்மன் கோவில் 
உண்டியல் எண்ணிக்கை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொரோனா  பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 12 நாட்கள் திருவிழாவில் ஐந்து நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தசரா திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய தொகை எண்ணிக்கை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வைத்து நடைபெற்றது.
இந்து சமய அறநிலைத்துறை ஆணையாளர்கள் கணேசன், அருணாசலம் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. நிரந்தர உண்டியல் 13, தற்காலிக உண்டியல் 50 மொத்தம் 63 உண்டியல். எண்ணிக்கை நடைபெற்றது. 
ரூ.1.82 கோடி வருவாய்
பக்தர்கள் ரொக்கமாக ரூ.1 கோடியே 82 லட்சத்து 41 ஆயிரத்து 210  காணிக்கையாக செலுத்தி இருந்தனர். தங்கம் 142 கிராம், வெள்ளி 2049 கிராம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணிக்கையில் தக்கார் ரோசாலி சுமைதா, கோவில் செயல் அலுவலர் கலைவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி மற்றும் குலசேகரன்பட்டினம் திருஅருள் மேல்நிலைப்பள்ளி மற்றும் உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பிறைகுடியிருப்பு சிவந்தி கலைக் கல்லூரி மாணவிகள் மற்றும் பக்தர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்


Next Story