தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் 100 கிலோ கம்பி திருடியவரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் 100 கிலோ கம்பி திருடியவரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே வாகைகுளம் விமான நிலையத்தில் கட்டிடவேலை நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் இருந்த கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் 100 கிலோ இரும்பு கம்பிகள் திருடப்பட்டன. இதுகுறித்து கட்டிட நிறுவனத்தின் பொறியாளரான நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே இடத்தில் கட்டிட வேலை செய்துவரும் முத்தையாபுரம் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 45) என்பவர் இரும்பு கம்பிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தார். அவரிடம் இருந்த 100 கிலோ இரும்பு கம்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story