கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
உடுமலை சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
தளி, நவ.19-
உடுமலை சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.
கழிவு நீர்
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட இடைவெளியில் ஆங்காங்கே ஆள் இறங்கு குழிகள் கட்டப்பட்டது. அந்த தொட்டிகள் சேதமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதுடன் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்ட பாதாள சாட்டை தொட்டிகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. மேலும் சாலையின் சமதளத்திற்கு ஏற்றாற்போல் அவை கட்டப்படுவதில்லை. சாலையை விடவும் உயரமாக உள்ளது அல்லது பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சேதமடைந்த தொட்டிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழை நீரோடு கலந்து கடும் துர்நாற்றத்துடன் சாலை முழுவதும் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சீரமைக்க வேண்டும்
அதுமட்டுமின்றி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் மழைநீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வருவதால் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.எனவே நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர்க் கால்வாய்களை முறையாக தூர்வாருவதற்கும், சேதமடைந்து வருகின்ற பாதாள சாக்கடை தொட்டிகளை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story