திருச்செந்தூர் அருகே விபத்தில் கிறிஸ்தர போதகர் பலியானார்


திருச்செந்தூர் அருகே விபத்தில் கிறிஸ்தர போதகர் பலியானார்
x
தினத்தந்தி 18 Nov 2021 9:27 PM IST (Updated: 18 Nov 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே விபத்தில் கிறிஸ்தர போதகர் பலியானார்

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). கிறிஸ்தவ போதகர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். நேற்று மாலையில் செல்வராஜ் திருச்செந்தூர்- பரமன்குறிச்சி சாலையில் உள்ள நடுநாலுமூலைக்கிணறு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மீன் லோடு ஏற்றி சென்ற மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளின் மீது மோதிய மினி லாரி சாலையோர மின்கம்பத்திலும் பயங்கரமாக மோதி நின்றது. இதில் மின்கம்பிகள் அறுந்து தொங்கியதால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, இறந்த செல்வராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து மின் இணைப்பு வழங்கினர். 

Next Story