தூத்துக்குடி அருகே கனமழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்


தூத்துக்குடி அருகே கனமழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
x
தினத்தந்தி 18 Nov 2021 9:53 PM IST (Updated: 18 Nov 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே கனமழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன வாழைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே கனமழையால் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குளங்கள் நிரம்பின
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர், மணியாச்சி, செக்காரக்குடி தளவாய்புரம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த மழை, காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து நள்ளிரவில் கோரம்பள்ளம் குளத்தை வந்தடைந்தது. 
உப்பாற்று ஓடையில் வெள்ளம்
இதனால் கோரம்பள்ளம் குளத்தில் நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பை கருதி, நேற்று அதிகாலை குளத்திலுள்ள 6 மதகுகள் திறக்கப்பட்டன. உப்பாற்று ஓடையில் திறக்கப்பட்ட வெள்ளம், அத்திமரப்பட்டி - காலாங்கரை இடையிலான தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்றது. இதனால், அத்திமரப்பட்டி - கோரம்பள்ளம் ஊர்களுக்கிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் தண்ணீர் குறைய தொடங்கியதும் வாகனங்கள் இயங்க தொடங்கி, தண்ணீரில் மெதுவாக ஊர்ந்து சென்றன.
200 ஏக்கர் வாழை...
மேலும் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதால், பகல் 10 மணியளவில் 2 மதகுகள் அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 4 மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் உப்பாற்று ஓடை கரைகளில் உள்ள வடிகால் குழாய்கள் பழுது காரணமாக, வெள்ளநீர், அத்திமரபட்டியில் உள்ள வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது. இதனால், சுமார் 200 ஏக்கர் வாழை கன்றுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.
மழை விபரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) : திருச்செந்தூர் 32, காயல்பட்டினம் 80, குலசேகரன்பட்டினம் 35, விளாத்திகுளம் 60, காடல்குடி 37, வைப்பாறு 47, சூரன்குடி 86, கோவில்பட்டி 37, கழுகுமலை 37, கயத்தாறு 91, கடம்பூர் 50, ஓட்டப்பிடாரம் 42, மணியாச்சி 64, வேடநத்தம் 35, கீழ அரசடி 13, எட்டயபுரம் 35.2, சாத்தான்குளம் 14.4, ஸ்ரீவைகுண்டம் 94, தூத்துக்குடி 37 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 48.77 மி.மீ., மழை பெய்துள்ளது.

Next Story