தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் ஊராட்சியில் நேரு நகர் உள்ளது. இந்த பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழை தண்ணீர் குளம்போல தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். மழை தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மழை தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமமக்கள், பரசலூர்.
செடிகள் அகற்றப்படுமா?
திருவாரூர் மாவட்டம் பேரளத்தை அடுத்த இஞ்சிகுடியில் சாந்தநாயகி - பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரத்தில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் கோபுரத்தின் கம்பீரம் குறைந்து வருகிறது. மேலும் ராஜகோபுரம் மிகவும் பழுதடைந்து உள்ளது. மழைக்காலம் என்பதால் மேலும் சேதாரம் ஏற்படுவதற்கு முன்பு கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
பொதுமக்கள், பேரளம்.
பள்ளி மைதானம் சீரமைக்கப்படுமா?
மன்னார்குடி மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகிறார்கள். விளையாட்டுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பெய்த கன மழையால் எங்கள் பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மைதானத்தை மண் நிரப்பி சீர் செய்ய வேண்டும் என்று மாணவிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பள்ளி மாணவிகள், மன்னார்குடி.
Related Tags :
Next Story