வீடுகள் இடிந்தன


வீடுகள் இடிந்தன
x
தினத்தந்தி 18 Nov 2021 4:58 PM GMT (Updated: 18 Nov 2021 4:58 PM GMT)

தாராபுரம் பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் 10 வீடுகள் இடிந்தன

தாராபுரம், 
தாராபுரம் பகுதியில்  விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் 10 வீடுகள் இடிந்தன. 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தில்லாபுரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது. 
10 வீடுகள் இடிந்தன
தாராபுரத்தில் நேற்றைய முன்தினம் மாலையில் 4.30 மணிக்கு தொடங்கிய கனமழை இடி மின்னலுடன் விடிய விடிய  கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுயது. நகரின் தாழ்வான பல பகுதியில் தண்ணீர் தேங்கியது. தாராபுரம் நகராட்சி பகுதியான வடதாரை, காமராஜ புரம், ஜல்லி குழி உள்ளிட்ட பல பகுதியில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. மேலும் இப்பகுதியில் 10 வீடுகள் இடிந்து விழுந்தன. தில்லாபுரி அம்மன்  கோவிலுக்கு செல்லும் சாலை பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. அத்துடன் ஜல்லிக்குழி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததது. இந்த அந்த வீடுகளில் குடியிருந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து நேற்று மாலையில் அமைச்சர் கயல்விழி மண்டபத்தில் தங்கியுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.பிறகு அதிகாரிகளுடன் ஜல்லிக்குழி, வடதாரை, பணங்காடு, காமராஜபுரம் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்தார். உடனடியாக அந்தந்த பகுதிகளிலுள்ள பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
நெல் நடவு பாதிப்பு 
தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளான காளிபாளையம், கொளத்துப்பாளையம், கரையூர், மீனாட்சிபுரம், மானூர், தேர்பாதை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு  மழை பெய்தது. இவை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவாகும். அதேபோன்று கோவிந்தாபுரம், சத்திரம் பகுதியில் உள்ள ஏரிக்கு நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. மேலும் தாராபுரம் பழைய ஆயக்கட்டு புதிய ஆயக்கட்டு பகுதிகளில் இருக்கும் 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் நடவு நாற்றங்கால் பணி முடிந்து நடவு பணி தொடங்கியிருந்தனர். இந்த நிலையில் தொடர் வடகிழக்கு பருவமழை காரணமாக நடவு பணி பாதிப்படைந்துள்ளது.
 மேலும் அமராவதி ஆற்றில் மழை நீர் கலந்து வருவதால் அமராவதி ஆற்றின் இரு கரையோரங்களிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அரசு மருத்துவமனை அருகே ராஜ வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.  மேலும் நகரின் தாழ்வான பகுதியிலான ஐந்து சாலை சந்திப்பு, பொள்ளாச்சி ரோடு, அமராவதி ரவுண்டானா, பூக்கடை கார்னர், சுல்தானிய தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல ஓடியது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, ஆர்.டி.ஓ. குமரேசன், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் சங்கர், நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், தாசில்தார் சைலஜா மற்றும் திமு.க.கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், ஹைடெக் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story