ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
ஓசூர், நவ.19-
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தினமும் லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1,055 கன அடி நீர் வந்தது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடியாகும். நீர் இருப்பு 41.98 அடி உள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 988 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு தண்டோரோ மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அதாவது ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் குளிக்கவோ, அதன் அருகிலேயோ செல்லக்கூடாது என்று வருவாய்த்துைறயினர் மூலம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
Related Tags :
Next Story