சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு


சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 10:50 PM IST (Updated: 18 Nov 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம், 
சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
பருவமழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது.  டெங்கு கொசுக்களால் மாவட்டத்தில் பலர் குறிப்பாக குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெருவை சேர்ந்த 6 வயது சிறுமி மற்றும் அவருடைய 1 வயது தம்பி ஆகியோருக்கும், ராமநாதபுரம் ரோமன்சர்ச் அருகில் 6 வயது சிறுவன் ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  உள்ளனர்.
கோரிக்கை
இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின் றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் ஏராளமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுவருவது பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது. அதிகரித்துள்ள டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story