திருவள்ளூர், புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவு


திருவள்ளூர், புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவு
x
தினத்தந்தி 18 Nov 2021 10:59 PM IST (Updated: 18 Nov 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவு

அரக்கோணம்

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அல்டர்ட் அறிவித்தும், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது. 

இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், பாண்டிச்சேரி அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை கேட்டு கொண்டதற்கு இணங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் 20 பேர் கொண்ட தலா ஒரு குழுவினர் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், புதுசேரிக்கும் அதிநவீன மீட்பு கருவிகளுடன் மீட்புப்படை வாகனத்தில் நேற்று காலை சென்றனர்.

Next Story