வீடூர் அணைக்கு வினாடிக்கு 3600 கனஅடி நீர்வரத்து
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடூர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 600 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது
விக்கிரவாண்டி
பலத்த மழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நேற்று இரவு முதல் நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனூர், பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதிகாரிகள் கண்காணிப்பு
தற்போது அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 600 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 32 அடியாக இருந்தாலும் தற்போதைய நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் அய்யப்பன், சண்முகம், பாலாஜி, கார்த்தி ஆகியோரை கொண்ட குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
அணையில் யாரும் குளிக்காத வகையில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் பாதகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story