மறுவிசாரணையை துரிதப்படுத்த கோர்ட்டு உத்தரவு


மறுவிசாரணையை துரிதப்படுத்த கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Nov 2021 11:19 PM IST (Updated: 18 Nov 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

போலி நகையை அடகு வைத்து ரூ. 47.87 லட்சம் மோசடி செய்த வழக்கில் மறுவிசாரணையை துரிதப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இளையான்குடி, 
போலி நகையை அடகு வைத்து ரூ. 47.87 லட்சம் மோசடி செய்த வழக்கில் மறுவிசாரணையை துரிதப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புகார்
இளையான்குடி வங்கியில் ஒன்றில்  கடந்த ஓராண்டுக்கு முன்பு வங்கியின் கிளை மேலாளர் (பொறுப்பு) சாஜிதா ரெகானா இளையான்குடி போலீசில் போலி நகை மோசடி தொடர்பாக புகார் செய்தார். 
அதில் வங்கியில் தணிக்கை செய்தபோது போலி நகைகளை வைத்து நகை மதிப்பீட் டாளர் பரமக்குடி சிவகுமார் (வயது53) மற்றும் பரமக்குடி மீனாள் (47), இளையான்குடி கருஞ்சுத்தி பாஞ்சாள்(50), காரைக்குளம் பாண்டிய ராணி (39), மேலத்துறையூர்  சேகரம் (50), இளையான்குடி சரண்யா தேவி (32), ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில்  வாணியவல்லம்  வள்ளி (44) ஆகியோர் ரூ.47.87 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. 
உத்தரவு
அப்போது நடைபெற்ற தீவிர விசாரணையில் நகை மதிப் பீட்டாளர் சிவக்குமார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார். முதல் குற்றவாளியான சிவகுமார் மரணம் அடைந்ததாலும், வங்கியின் மேலாளர்கள் மாற்றம் செய்ததால் குற்ற வழக்கு கிடப்பில் போடப்பட்டது. 
இந்தநிலையில் வங்கியின் தற்போதைய கிளைமேலாளர் கணேஷ் பாண்டியன் சிவகங்கை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து  மாவட்ட கோர்ட்டு மீண்டும் வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. 
மீண்டும் விசாரணை
இதையடுத்து சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நகை மதிப்பீட்டாளர் சிவகுமார் மற்றும் மீனாள், பாஞ்சாள், சேகரம், சரண்யா தேவி, பாண்டிய ராணி, வள்ளி ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மீண்டும் விசாரணை செய்து வருகின்றனர். 
நகை மதிப்பீட்டாளர் சிவகுமார் கடந்த ஆண்டு இறந்து விட்ட நிலையில் 6 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டு உத்தரவுப்படி விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

Next Story