திருவெண்ணெய்நல்லூர் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் சாலை மறியல்


திருவெண்ணெய்நல்லூர் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Nov 2021 11:20 PM IST (Updated: 18 Nov 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் சாலை மறியல்


அரசூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே  டி.புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தைலாபுரம் புதுத்தெருவில்  வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆத்திரம் அடைந்த அவர்கள் திருவெண்ணெய்நல்லூர்-திருக்கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மழைநீர் வடிகால் அமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும் எந்தவித நவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.  

பின்னர் அவர்கள் அங்கிருந்து திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்தனர். இதையடுத்து அங்கு வந்த ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்தி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடியிருப்பு பகுதியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story