தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் இன்றும், நாளையும் கோர்ட்டு புறக்கணிப்பு

தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் இன்றும், நாளையும் கோர்ட்டு புறக்கணிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 11:40 PM IST (Updated: 18 Nov 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் இன்றும், நாளையும் கோர்ட்டு புறக்கணிப்பு

நாமக்கல்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சேலம் குடும்பநல நீதிமன்ற நீதிபதியை மாற்ற வேண்டும். கீழமை நீதிமன்றங்களின் நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் பணிபுரியும் வக்கீல்களுக்கு நீதிபதிகள் உரிய மரியாதை தர ஐகோர்ட்டு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வக்கீல்களுக்கு ஆதரவாகவும் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
=======

Next Story