கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி


கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 18 Nov 2021 11:46 PM IST (Updated: 18 Nov 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

கட்டிடத்தில் இருந்து கீழே தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர், நவ.19-
கல்லூரி மாணவர்
கரூர் தாந்தோணிமலை குமரன் நகரை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் குருபிரகதீஷ் (வயது 18). இவர் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக்கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். 
இந்தநிலையில் கரூர்- திண்டுக்கல் சாலையில் உள்ள உறவினருக்கு சொந்தமான கட்டிடத்தில் பணி நடைபெற்று வந்தது. அப்போது முதல் தளத்தில் நின்று கொண்டிருந்த குருபிரகதீஷ் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். 
பிரேத பரிசோதனை
இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குருபிரகதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தாந்தோணிமலை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story