பாலாற்றில் 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து ஆற்றை கடக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம்
ஆற்றை கடக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம்
ராணிப்பேட்டை
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாலாற்றில் சுமார் 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களான அரப்பாக்கம், கீழ்மின்னல், பூட்டுத்தாக்கு, நந்தியாலம், விஷாரம் (சாதிக் பாஷா நகர்), வேப்பூர், காரை, பிஞ்சி, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம், கட்பேரி, திருப்பாற்கடல், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி ஆகிய கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், யாரும் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றங்கரையோரம் வேடிக்கை பார்க்கவோ, கரைகளை கடக்கவோ வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story