பாலாற்று வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் அடித்து செல்லப்பட்ட ராணுவவீரர்


பாலாற்று வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் அடித்து செல்லப்பட்ட ராணுவவீரர்
x
தினத்தந்தி 18 Nov 2021 11:52 PM IST (Updated: 18 Nov 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

விரிஞ்சிரம் தரைபாலத்தை எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற ராணுவவீரர் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

வேலூர்

விரிஞ்சிரம் தரைபாலத்தை எச்சரிக்கையை மீறி மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற ராணுவவீரர் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். 

தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிஞ்சிபுரத்தில் இருந்து வடுகந்தாங்கல் செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் பாலத்தில் இருபுறமும் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை மற்றும் இரும்பு தடுப்புகள் (பேரிகார்டு) வைக்கப்பட்டிருந்தது.

விரிஞ்சிபுரம் தரைப்பாலம் வழியாக சென்ற பாலாற்று வெள்ளத்தின் அளவு நேற்று முன்தினம் குறைந்தது. அதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகனங்கள் சென்று வந்துள்ளன.
இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா-தமிழக மாநில எல்லைப்பகுதிகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்தது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்

அதனால் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் நேற்று காலை மீண்டும் மூழ்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் பாலத்தில் செல்லும் வெள்ளத்தின் அளவு அதிகரித்து கொண்டு இருந்தது. அதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு, இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன.

இந்த நிைலயில் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை சேர்ந்த மனோகர் (வயது 32). இவர் லடாக்கில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் நேற்று மாலை 5 மணி அளவில் விரிஞ்சிபுரத்தில் இருந்து வடுகந்தாங்கலுக்கு தரைப்பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றார். அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அவரிடம் வெள்ளம் அதிகமாக செல்கிறது. எனவே பாலம் வழியாக செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர். அதனை பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் பாலத்தை கடக்க முயன்றார். சிறிது தூரம் சென்ற நிலையில் வெள்ளத்தின் வேகத்தில் அவர் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து தவறி பாலாற்றில் விழுந்தார். பின்னர் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். 

இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார், தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் வேறு பகுதியில் கரையேறினாரா? அல்லது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாரா? என்பது உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கவில்லை. அவர் கதி என்ன என்ற விவரம் தெரியவில்லை. 
விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற வாலிபர் பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story