ஒடுகத்தூர் உத்திரகாவிரி ஆற்றில் மேம்பாலத்தை தொட்டு செல்லும் வெள்ளம்


ஒடுகத்தூர் உத்திரகாவிரி ஆற்றில் மேம்பாலத்தை தொட்டு செல்லும் வெள்ளம்
x
தினத்தந்தி 18 Nov 2021 11:52 PM IST (Updated: 18 Nov 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

ஒடுகத்தூர் உத்திரகாவிரி ஆற்றில் 19 அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டு,மேம்பாலத்தை தொட்டபடி செல்கிறது.

அணைக்கட்டு
 
ஒடுகத்தூர் உத்திரகாவிரி ஆற்றில் 19 அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டு,மேம்பாலத்தை தொட்டபடி செல்கிறது.

மேம்பாலத்தை தொட்டு செல்லும் வெள்ளம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த ஜவ்வாது மலை மற்றும் மேல் அரசம்பட்டிலிருந்து உத்திர காவேரி ஆறு உருவாகி வருகிறது. இந்த ஆறுவெட்டுவானம் வழியாக சென்று பால் ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருவதால் உத்திர காவிரி ஆறு, பேயாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஒடுகத்தூர் அருகே உத்திர காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 20 அடி உயரத்தில் பாலம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் 19 அடி உயரத்துக்கு செல்வதால் பாலத்தை தொட்டுக்கொண்டு செல்கிறது. இதனால் வண்ணாந்தாங்கல், கொட்டாவூர் உள்ளிட்ட பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.

மரம்விழுந்து வீடு சேதம்

ஒடுகத்தூர் அண்ணா நகர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வீட்டின் மீது மரம் விழுந்து வீடு சேதம் அடைந்தது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அணைக்கட்டு மற்றும் ஒடுகத்தூர் பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகளை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிகொண்டா பெரிய ஏரி உபிநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி அங்கன்வாடி மையத்தில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார். மேலும் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் மேம்பாலம் வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. குடியாத்தம் செல்லும் பஸ்கள் வெட்டுவானம் வரை சென்று வரும் வகையில் திருப்பி விட்டுள்ளன.

Next Story