கரூரில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கரூர்,
9-ம் கட்ட முகாம்
கரூரில் மாவட்டத்தில் நேற்று 9-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற முகாமிற்கு ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட்டனர். அதேபோல் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டனர்.
11 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
நேற்று நடைபெற்ற முகாம்களில் முதல் தவணை தடுப்பூசி 3 ஆயிரத்து 621 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 7 ஆயிரத்து 646 பேருக்கும் என மொத்தம் 11 ஆயிரத்து 267 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 86 ஆயிரத்து 428 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 3 லட்சத்து 14 ஆயிரத்து 856 பேரும் என மொத்தம் 10 லட்சத்து ஆயிரத்து 284 பேர் செலுத்தி உள்ளனர்.
மேலும் முதல் தவணை தடுப்பூசி 80 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 37 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story