பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை


பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை
x
தினத்தந்தி 19 Nov 2021 12:04 AM IST (Updated: 19 Nov 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

தரகம்பட்டி, 
கடவூர் தாலுகா, செம்பியநத்தம் கிராமம், மோளப்பட்டியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மீண்டும் கருவுற்ற லதா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் 4-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, லதாவின் தந்தை பழனிச்சாமி செங்காட்டூரில் உள்ள தனது வீட்டிற்கு அவர்களை அழைத்து சென்றார்.
இதையடுத்து, தடுப்பூசி போடுவதற்காக கிராம செவிலியர் ஸ்ரீமதி அவரது வீட்டுக்கு சென்று போது பிறந்து 3 நாட்களேயான குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் சிந்தாமணிபட்டி போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில் கடவூர் தாசில்தார் ராஜாமணி முன்னிலையில் கரூர் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் மாணிக்கம், செங்குட்டுவன் ஆகியோர் செங்காட்டுர், ஆத்துவாரி மேட்டில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அதே இடத்தில் புதைத்தனர்.

Next Story