வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம்
வாசுதேவநல்லூர் யூனியன் கூட்டம் நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் யூனியன் கவுன்சிலர்கள் முதலாவது கூட்டம், யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. யூனியன் தலைவர் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் ஜெயராமன், வேலம்மாள், யூனியன் துணைத்தலைவர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வாசுதேவநல்லூர் யூனியனில் உள்ள 8 கிராம சாலைகளை நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது. யூனியன் மேலாளர் கருத்தப்பாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story