மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது


மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 19 Nov 2021 1:28 AM IST (Updated: 19 Nov 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஸ்ரீமுஷ்ணம், 

 டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை சப்ளை செய்வதற்காக கடலூர் டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று ஸ்ரீமுஷ்ணம் நோக்கி புறப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை இறக்கி வைத்துவிட்டு அருகே குணமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு லாரி புறப்பட்டு சென்றது. அக்ரஹாரம் அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக சாலையோரமாக லாரியை டிரைவர் இயக்கினார். அப்போது பாரம் தாங்காமல் எதிர்பாராதவிதமாக லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. 

ரூ.25 லட்சம்
லாரியில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்தன. இருப்பினும் ஒரு சில மதுபாட்டில்கள் மட்டுமே சேதமடைந்தன. இது குறித்த தகவலின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர் இதனிடையே தகவல் அறிந்த டாஸ்மாக் மண்டல மேலாளர் ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த மதுபாட்டில்கள் பெட்டிகளை வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story