பிரபல ரவுடி ‘சைக்கிள்’ ரவி கோர்ட்டில் சரண்
பெங்களூருவில் கஞ்சா விற்றதாக கூட்டாளி கைதான வழக்கில் பிரபல ரவுடி ‘சைக்கிள்’ ரவி கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
பெங்களூரு:பெங்களூருவில் கஞ்சா விற்றதாக கூட்டாளி கைதான வழக்கில் பிரபல ரவுடி ‘சைக்கிள்’ ரவி கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
பிரபல ரவுடி ‘சைக்கிள்’ ரவி
பெங்களூருவை சேர்ந்தவர் ரவி என்ற ‘சைக்கிள்’ ரவி. இவர், பிரபல ரவுடி ஆவார். சைக்கிள் ரவி மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு சைக்கிள் ரவி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும், மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை சைக்கிள் ரவி வாடிக்கையாக வைத்திருந்தார்.
இதற்கிடையில், பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள தலகட்டபுரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தார். அந்த வாலிபரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
கோர்ட்டில் சரண்
அதே நேரத்தில் அந்த வாலிபருக்கும், பிரபல ரவுடி சைக்கிள் ரவிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபர், சைக்கிள் ரவியின் கூட்டாளி என்பதும், அவருக்கும் கஞ்சா விற்பனையில் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, ரவுடி சைக்கிள் ரவியை கைது செய்ய, தலகட்டபுரா போலீசார் தீவிரம் காட்டினார்கள். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், பெங்களூரு கோர்ட்டில் நேற்று காலையில் சைக்கிள் ரவி நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சைக்கிள் ரவி கோர்ட்டில் சரண் அடைந்திருப்பதை தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனா் ஹரீஷ் பாண்டேவும் உறுதி செய்துள்ளனர். மேலும் தலகட்டபுரா கஞ்சா விற்பனை வழக்கில் சைக்கிள் ரவியை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஹரீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story