வெள்ளத்தில் மூழ்கி 5 ஆயிரம் கோழிகள் சாவு
வள்ளியூர் அருகே வெள்ளத்தில் மூழ்கி 5 ஆயிரம் கோழிகள் செத்தன.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தலைவர்மனை கிராமத்தைச் சேர்ந்தவர் வில்சன். இவர் ஆனைகுளம் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் துலுக்கர்பட்டியில் இருந்து ஆனைகுளம் செல்லும் கால்வாயில் நள்ளிரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கால்வாயில் உள்ள தடுப்பணையை தாண்டி வெள்ளம் வில்சன் நடத்தி வரும் கோழிப்பண்ணைக்குள் புகுந்தது.
பண்ணையில் இருந்த கோழிகள் சுமார் 3 அடி தண்ணீரில் தத்தளித்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்ததால் சுமார் 5 ஆயிரம் கோழிகள் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக செத்தன. நேற்று காலையில் வழக்கம்போல் கோழிப்பண்ணைக்கு வில்சன் வந்தார். அங்கு கோழிகள் தண்ணீரில் மூழ்கி செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story