மழை பாதித்த பகுதிகளில் ரங்கசாமி ஆய்வு


மழை பாதித்த பகுதிகளில் ரங்கசாமி ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2021 2:39 AM IST (Updated: 19 Nov 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மழை பாதிப்புகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.

புதுச்சேரி, நவ.19-
புதுவையில் மழை பாதிப்புகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.
இடைவிடாது கனமழை 
புதுவையில்  நேற்று முன்தினம் பிற்பகல் முதல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது. அதாவது நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 36.3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
நேற்று காலை நிலைமை தலைகீழாக மாறியது. காலை 9 மணிமுதல் மழை கொட்டோ கொட்டு என கொட்ட தொடங்கியது.  இடைவிடாது இந்த கனமழை பெய்து கொண்டே இருந்தது.
 ரங்கசாமி ஆய்வு 
மழைநீர் தேங்கிய பகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவர் கார் மூலம் கிருஷ்ணாநகர், 45 அடி ரோடு, ராஜீவ் காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம், எல்லைப்பிள்ளைசாவடி, மோகன்நகர், செயின்பால்பேட், தாகூர் நகர், வினோபாநகர், வேலன் நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டார்.
மேலும் மழை பாதிப்புகள் குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்தார். மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அங்கு பணியில் இருந்த ஊழியர்களை கேட்டுக்கொண்டார்.

Next Story