பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 2:51 AM IST (Updated: 19 Nov 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடியை சேர்ந்தவர் வதனராஜ் (வயது 29). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உமாமகேஸ்வரி (25). இவர் அரசு தேர்வில் பங்கேற்பதற்காக நெல்லையில் உள்ள பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு கோட்டையடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், உமா மகேஸ்வரியிடம் முகவரி கேட்பது போல் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story