லாரி டிரைவர் தற்கொலை
நெல்லை அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 43). லாரி டிரைவர். கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட இசக்கிமுத்து நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story