நாமக்கல்லில் இடைவிடாது பெய்த சாரல் மழை மங்களபுரத்தில் அதிகபட்சமாக 52 மி.மீட்டர் பதிவு
நாமக்கல்லில் இடைவிடாது பெய்த சாரல் மழை மங்களபுரத்தில் அதிகபட்சமாக 52 மி.மீட்டர் பதிவு
நாமக்கல்:
நாமக்கல்லில் இடைவிடாது சாரல் மழை பெய்தது. மங்களபுரத்தில் அதிகபட்சமாக 52 மி.மீட்டர் மழை பதிவானது.
தொடர் மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக மங்களபுரம் பகுதியில் 52 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
மங்களபுரம்-52, கொல்லிமலை-15, சேந்தமங்கலம்-11, ராசிபுரம்-10, எருமப்பட்டி-10, புதுச்சத்திரம்-6, பரமத்திவேலூர்-5, திருச்செங்கோடு-5, மோகனூர்-5, கலெக்டர் அலுவலகம்-3, நாமக்கல்-2. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 124 மி.மீட்டர் ஆகும்.
முகப்பு விளக்கு
நாமக்கல் நகரை பொறுத்தவரையில் நேற்று காலை முதலே இடைவிடாது சாரல்மழை பெய்தது. இதனால் பஸ் பயணிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குடைபிடித்து செல்வதை பார்க்க முடிந்தது. மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு மெதுவாக வாகனங்களை ஓட்டி சென்றனர். காலை முதல் மாலை வரை குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவியது.
Related Tags :
Next Story