மாநகர பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு


மாநகர பஸ்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Nov 2021 2:33 PM IST (Updated: 19 Nov 2021 2:33 PM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு பஸ் பணிமனையில் நேற்று மாலை மாநகர பஸ்களின் தரம் குறித்து அம்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என 3 மணி நேரம் சோதனை செய்தனர். இந்த பணிமனையில் மொத்தம் 159 பஸ்கள் உள்ளன. அதில் நேற்று 20 பஸ்களில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வு பணி தொடரும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story