ஸ்ரீவைகுண்டம் அரசு கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
ஸ்ரீவைகுண்டம் அரசு கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு தமிழர் தந்தை சி பா ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வீடு அரசு வட்டார கிளை நூலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 54-வது தேசிய நூலக வாரவிழா மற்றும் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
இதையொட்டி நூலகத்தில் உள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா தொடங்கப்பட்டது. இதில நூலகர் கண்ணன், கலைமகள் யோகாமாஸ்டர் இசக்கிமுத்து, கல்வி மேலாண்மை குழு உறுப்பினர் ்பாலசுப்பிரமணியம், குமரகுருபரர் சுவாமிகள் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தாசில்தார் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் நூலகர்கள் ஐரின், கண்ணன், கொங்கராயகுறிச்சி நூலகர் விஜிலா, கொத்தலரிவிளை நூலகர் முத்துசெல்வி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story