வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 19 Nov 2021 6:09 PM IST (Updated: 19 Nov 2021 6:09 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளனம்பட்டியில் சாலையின் இரு பக்கங்களிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து ஓட்டல்கள், டீ கடைகள் உள்பட 8 கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
இது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக இருந்தது. இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஐகோர்ட்டு விசாரித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல், உதவி பொறியாளர் கோபிநாத் மற்றும் வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story