கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2021 7:29 PM IST (Updated: 19 Nov 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும், தமிழக அரசு அறிவித்த ஊக்க ஊதியம் அனைத்து கிராம, பகுதி சுகாதார செவிலியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய நல சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாநில செயலாளர் கோவிந்தம்மாள், மாவட்ட தலைவர் லோகேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் துணை சுகாதார நிலையங்களில் செவிலியர் நியமன கருத்துருவை கைவிட வேண்டும். வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வேண்டும். வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. 

கொட்டும் மழையில் செவிலியர்கள் குடைகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோத்தகிரி, கூடலூர், குன்னூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவிலியர்கள் வந்து கலந்துகொண்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


Next Story