கோவில்பட்டியில் பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டியில் பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 40). இவரது மனைவி வனிதா (வயது 37). இவர்களுக்கு நிரஞ்சித், ரகுராம், என்று 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு சுப்புராஜ் சென்னையில் வேலை பார்த்த போது விபத்தில் சிக்கினார்.
அப்போது வனிதா மந்தித்தோப்பு ரோடு பகுதியில் குடியிருக்கும் ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் சாந்தா ராஜ் ( 61) என்பவரிடம் ரூ 1.70 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
சிகிச்சை முடிந்த பின் சுப்புராஜ் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டாராம். இதனால் வனிதா, மாமியார் யசோதை(60) மற்றும் மகன்களுடன் கோவில்பட்டி வீட்டில் வசித்து வருகிறார். மேலும் சாந்தாராஜிடம் வாங்கிய கடனுக்கு வனிதா மாதந் தோறும் வட்டி கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாந்தாராஜ், வனிதாவை அவதூறாக பேசி, கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story