தேனியில் கலெக்டரிடம் புகார் தெரிவித்த இளம்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


தேனியில் கலெக்டரிடம் புகார் தெரிவித்த  இளம்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 9:43 PM IST (Updated: 19 Nov 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் கலெக்டரிடம் புகார் தெரிவித்த இளம்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி:
திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி சித்ரா. இவர் நேற்று தனது உறவினர்களுடன் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் இருந்தார். இதனால் சித்ராவின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். கலெக்டர் கார் அருகில் அவர்கள் காத்திருந்தனர். அப்போது அவர்களை பார்த்த கலெக்டர் அழைத்து விசாரித்தார். அப்போது கலெக்டரிடம் பேசிய சித்ரா, "எனது கணவர் மாணிக்கம், எனது தம்பி ரமேஷ் உள்பட 3 பேரை கம்பம் போலீசார் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். எனது கணவர் மீது திருட்டு வழக்குகள் எதுவும் இல்லை. எனது தம்பி மீது ஏற்கனவே வழக்கு இருந்தது. தற்போது திருந்தி வாழ முயற்சிக்கிறார். எனவே, போலீசார் அழைத்துச் சென்ற 3 பேரையும் விடுவிக்க வேண்டும்" என்று கண்ணீருடன் கூறினார். 
இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்து உண்மை நிலை அறிந்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். அப்போது சித்ரா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே கலெக்டர் தனது காரில் இருந்து தண்ணீரை எடுத்து கொடுத்து முகத்தில் தெளிக்க வைத்து ஆறுதல் கூறினார். பின்னர் தேனி போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் சித்ராவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கம்பம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story